நில மோசடி புகார்.! அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி கைது.!
எம்.ஆர்.விஜயபாஸ்கர்: கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது மகள் ஷோபனா ஆகியோருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . இந்த புகாரின் பெயரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு அண்மையில், காவல்துறை வசம் இருந்து சிபிசிஐடி பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளிமாநிலத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று கேரளாவில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.