அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் கடந்த 1980ஆம் ஆண்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால்,1984-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டபோது தோல்வியுற்றார்.
இதனையடுத்து,கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில்,அவர் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.அவருக்கு வயது 67 ஆகும்.
அரக்கோணத்தில் உள்ள சகோதரர் விஜயராகவன் வீட்டில் முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து,முன்னாள் அமைச்சர் விஜயசாரதியின் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…