மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழித்து பேனா சின்னம் தேவையா.? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!
கடலுக்குள் பேனா சின்னம் அமைக்கப்பட்டால், அதனால் மீனவர்களின் வாழ்வாதரம் வெகுவாக பாதிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து 650 மீ தொலைவில் கடலுக்கு நடுவே சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 81 கோடி ரூபாய் வரையறை செய்தது.
மீனவர்கள் வாழ்வாதாரம் : இந்த பேனா சிலை அமைபப்து தொடர்பாக அரசியல் கட்சியினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் கலந்து வந்த வண்ணம் இருக்கிறது. இந்த பேனா சிலை அமைப்பது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழித்து இந்த பேனா நினைவு சின்னம் தேவைதானா என கேள்வி எழுப்பினார்.
மீன்கள் இனப்பெருக்கம் : மேலும் அவர் கூறுகையில், ஆறுகள் வந்து கடலில் சேரும் முகத்துவார பகுதியில் மீன்குஞ்சுகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். அந்த இடம் பாதிக்கும் வகையில் இந்த பேனா சின்னம் அமைய உள்ளது. அப்படி செய்தால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். அதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். என கூறினார்.
இடைத்தேர்தல் : மேலும், இந்த பேனா சிலை அமைக்க 81 கோடி ரூபாய் அரசு பணம். ஆனால், அதே நேரம் பள்ளிக்கூடம் நடத்துவதற்கு பணமில்லை என மற்றவர்களிடம் கேட்கும் நிலை என விமர்சித்தார். அடுத்து இடைத்தேர்தல் குறித்து கேட்கையில், தேர்தல் என்றாலே, டிடிவி.தினகரன் பயந்துவிடுகிறார். எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.