2014, டிசம்பர் 31க்கு முன்னர் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும்படியான சிஏஏ சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தது. மக்களை மத ரீதியில் பிரிக்கும் முயற்சி என பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வெல்ல முடியுமா? மம்தா பானர்ஜி கடும் தாக்கு
இந்த குடியுரிமை திருத்த சட்டம் இன்னும் 7 நாட்களில் நிறைவேற்றப்படும் என மத்திய இணையமைச்சர் சாந்தனு தாகூர் அண்மையில் கூறி மீண்டும் இந்த சட்டம் குறித்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். இதற்கு மீண்டும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு அதிமுக முன்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் பதில் கூறினார்
அவர் திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சட்ட திருத்தம் பற்றி எங்கள் அதிமுக பொதுச்செயலாளர் “எடப்பாடி பழனிசாமி” என்பதற்கு பதிலாக “அண்ணாமலை” என தவறுதலாக கூறி, ஏற்கனவே அறிக்கை மூலம் பதில் அளித்துவிட்டார் என்று பேசினார். திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் நடைபெற்ற நேற்றைய போராட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பேசினார்.
அவர் மேலும் கூறுகையில், பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே ஜெயலலிதா தலைமையில். 37 எம்பி-க்களை மக்கள் அதிமுகவுக்கு தந்தார்கள். இந்த முறை எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு 39 எம்பிக்கள் கிடைக்கும் என்றும் பேசினார் திண்டுக்கல் சீனிவாசன்.
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…