பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.

திருநெல்வேலி : அதிமுகவில் இருந்து 1970-ல் நெல்லை மாவட்டம் ஆலங்குளம், 1980-ல் நெல்லை பாளையம்கோட்டை ஆகிய தொகுதிகளில் இருந்து எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றவர் கருப்பசாமி பாண்டியன். அதன் பிறகு அதிமுகவில் இருந்து விலகி திமுக-வில் இணைந்து 2000-ல் தென்காசி தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றிருந்தார்
பின்னர் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு பிறகு கடந்த 2020-ல் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுக மாவட்ட கட்சி பொறுப்புகளில் முக்கிய அங்கம் வகித்து வந்த கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியனின் மறைவு அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!
March 26, 2025
RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!
March 26, 2025
விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!
March 26, 2025