மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில வளர்ச்சிக்குழு கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக சார்பில் கலந்துகொண்டுள்ளார்.

சென்னை : மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது. அது மக்களுக்கு எந்தவகையில் சென்று சேர்க்கிறது, அது தொடர்பான மாவட்ட, ஊரக வளர்ச்சி குறித்தும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாநில அளவிலான வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு எனும் திஷா (DISHA) கமிட்டி செயல்பட்டு வருகிறது.
இதில் அனைத்து கட்சி சார்பிலும் எம்பிக்கள், எல்எல்ஏ பிரமுகர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த கமிட்டியின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இக்குழு ஆலோசனை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக, அதிமுக, விசிக, மதிமுக என பல்வேறு கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே அதிமுகவில் செங்கோட்டையன் பேச்சுக்கள், செயல்கள் அரசியல் களத்தில் பேசுபொருளாகி வரும் சூழலில் முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றது மேலும் பேசுபொருளாக மாறியது.
ஆனால், திஷா கமிட்டியில் அதிமுக சார்பில் செங்கோட்டையன் தான் உறுப்பினராக இருக்கிறார் என்றும், இதற்கு முன்னர் நடைபெற்ற திஷா கமிட்டி ஆலோசனை கூட்டத்திலும் அதிமுக சார்பில் செங்கோட்டையன் பங்கேற்று அதிமுகவின் கருத்துக்களை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விசிக சார்பில் திருமாவளவன், மதிமுக சார்பில் துரை வைகோ என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025