வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில்,சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘வேளச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலில் எனது வீட்டின் நிலைமையை சரி செய்ய வேண்டும். என் குடும்பத்தை வேறொரு பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றிவிட்டு வருகிறேன். பின்னர் இங்கு வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்’ என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…