குடும்பத்தை மறந்து மக்களுக்காக உழைக்கும் காவலர்களின் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு காவல் ஆணையர் அவர்களது பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்து உதவியுள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகிய முன்கள பணியாளர்களாக திகழ்பவர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வருகின்றனர்.
இச்சூழிலில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் நாள் முழுவதும் உழைக்கும் காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அவர்கள் தங்களது குடும்பத்தை கூட கவனிக்க முடியாத சூழலில், தங்களது பிள்ளைகளின் மேற்படிப்பை கூட கவனிக்க இயலாத சூழலில் தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் மேற்படிப்பு படிக்கவிருக்கும் போலீசாரின் குழந்தைகளின் விவரங்களை தேர்ந்தெடுத்து, அவர்களை அவர்கள் விரும்பும் கல்லூரியில் அவர்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவில் சேரப்பதற்கான அனுமதி கடிதத்தை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
காவலர்களின் கவலையை புரிந்து கொண்டு அதற்கான முயற்சியை செய்த துணை காவலர் மகேஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனாவால் இதுவரை 2,054 போலீசார் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்ப நலனை கருதி, அவர்களது பிள்ளைகளில் மேற்படிப்பு படிக்கவிரப்பவர்களின் 220 பேரின் விவரங்களை சேகரித்து அவர்கள் படிக்க விரும்பும் கல்லூரியில் சேர்வதற்கான சிபாரிசு கடிதத்தை கொடுத்திருந்தோம். அதை ஏற்று முதல் 52 பேருக்கு முதற்கட்டமாக அவர்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவில் அட்மிஷன் வழங்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் அட்மிஷன் போடப்படும் என்று கூறியுள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…