24 துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் தகனம் ???
தமிழகத்தைச் சோ்ந்த இந்திய வனத்துறை அதிகாாி மணிகண்டன், கா்நாடகா வனப்பகுதியில் யானைத்தாக்கி உயிாிழந்தார்.அவரது உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மாியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்தைச் சோ்ந்த இந்திய வனத்துறை அதிகாாி மணிகண்டன் கா்நாடகாவில் உள்ள நாகா்ஹோல் புலிகள் காப்பகத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தாா். காட்டு தீயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அவா் சென்றிருந்த போது காட்டு யானை ஒன்று அவரை தாக்கியது.
இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவா் உயிாிழந்தாா்.
தொடா்ந்து அவரது உடல் பிரேத பாிசோதனைக்கு பிறகு சொந்த ஊரான தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு அவரது உடலுக்கு இந்திய வனப்பணி அதிகாாிகள் மற்றும் வனத்துறையினரும் மாியாதை செலுத்தினா்.
பின்னா் தொட்டாந்துறையில் உள்ள யானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேனி மாவட்ட காவில் துறையினா் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மாியாதை செலுத்திய பின்னா் உடல் தகனம் செய்யப்பட்டது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு