தொடரும் வெளிநாட்டு வேலை மோகம்.! மகனுக்காக லட்ச லட்சமாய் இழந்ததாக தாய் போலீசில் புகார்.!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கோமு என்ற பெண் தனது மகனின் வெளிநாட்டு வேலைக்காக மங்கையர்கரசி, விஜயன், எம்.ஜி.ஆர் நம்பி ஆகியோரிடம் 5 லட்சத்திற்கும் அதிகமாக கொடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக கூறி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வெளிநாடு செல்வதாக கூறி அந்த ஊரில் இவர் ஏமாந்துவிட்டார். இந்த ஊரில் இவர்கள் இத்தனை லட்சம் ஏமாற்றி விட்டனர் என செய்தித்தாள்களில் செய்திகள் படித்தாலும், அங்கு சென்றால் கைநிறைய சம்பாதித்து விடலாம். நம் கஷ்டம் நீங்கி விடும் என பலரும் அதே போல தவறான நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுவது தொடர் கதையாக தான் இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதி ஆலம்பட்டியை சேர்ந்தவர் கோமு . இவர் கணவர் பெயர் சூட்டுடையார். இவருக்கு மாரியப்பன் – மங்கையற்கரசி எனும் தம்பதி அப்பகுதியில் பழக்கமாகி உள்ளனர்.
அவர்கள் கோமு அவர்களின் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதன் படி முதலில் 1.50 ரூபாயை மங்கையற்கரசி, விஜயன், சென்னையை சேர்ந்த எம்ஜிஆர் நம்பி ஆகியோரிடம் கோமு கொடுத்துள்ளார். பின்னர் 3 லட்சம் கேட்டுள்ளனர் அதனையும் கொடுத்துள்ளார்.
இப்படியாக 5 லட்சத்திற்கும் அதிகமாக கொடுத்துள்ளார். அதன் பின்னரும் பணம் கேட்டதும், சந்தேகமடைந்து, இதுவரை கொடுத்த பணத்தை கோமு திரும்ப கேட்டுள்ளார். ஆனால் மங்கையற்கரசி கொடுக்கவில்லை. இதோ தருகிறேன் என 1 வருடம் கடந்துவிட்டது.
இதுகுறித்து , தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள்ளது. புகாரில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக, மாரியப்பன் மனைவி மங்கையற்கரசி, விஜயன், எம்ஜிஆர் நம்பி ஆகியோர் 5 லட்சத்திற்கும் அதிகமாக ஏமாற்றிவிட்டனர். இந்த கடனுக்காக மாதம் வட்டி கட்டி வருகிறேன். அதனால் மொத்தமாக 6 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு தருமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.