மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் -கனிமொழி
சிறப்பு குழந்தைகளையும், மாற்றுத் திறன் குழந்தைகளையும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் சிறப்பு குழந்தைகளையும், மாற்றுத் திறன் குழந்தைகளையும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி கேட்க்கொண்டுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், 10ம் வகுப்பில் அனைத்து மாணவர்களையும் தேர்வின்றி தேர்ச்சியடைய அனுமதித்த தமிழக அரசு, “சிறப்பு குழந்தைகள்” மற்றும் “மாற்றுத் திறன்” மாணவர்கள் கொரோனா காலத்தில் தேர்வெழுத கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல் இந்நிலையில், தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு, “சிறப்பு குழந்தைகளையும், மாற்றுத் திறன் குழந்தைகளையும்” தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு, “சிறப்பு குழந்தைகளையும், மாற்றுத் திறன் குழந்தைகளையும்” தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்.
2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 18, 2020