யாருக்காக இந்த பட்ஜெட் உதவிகளும், சலுகைகளும் தந்திருக்க வேண்டும்? – ப சிதம்பரம் விவாதத்திற்கு அழைப்பு

Default Image

மத்திய பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பட்ஜெட் தாக்கலில் எந்தவொரு சலுகையும் இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவின் மொத்த செல்வத்தில் 73% யார் கைகளில் உள்ளது? 1% மக்களின் கைகளில் உள்ளது. அவர்களுக்கும், அவர்களுடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அளித்த கடன் தள்ளுபடி ரூ.2,38,000 கோடி, வரிச்சலுகை ரூ.1,45,000 கோடி என்றும் இவை போதுமே எனவும் கூறியுள்ளார்.

இப்பொழுது அறிவித்துள்ள பட்ஜெட் யாருக்கு உதவிகளும் சலுகைகளும் தந்திருக்க வேண்டும்? என கேள்வியை எழுப்பியுள்ளார். விவசாயிகள், குத்தகை விவசாயிகள், தினசரி கூலி வேலை செய்பவர்கள், குறு மற்றும் சிறு தொழில் செய்பவர்கள், வேலை இழந்தவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், உழைக்கும் வர்க்கம், நடுத்தர வர்க்க மக்கள் ஆகியோருக்கு அல்லவா உதவிக் கரம் நீட்டியிருக்க வேண்டும்? என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 36 மாதங்களாக மேற்கண்ட எளிய மக்களுக்கு எந்த உதவியும் செய்யாத பட்ஜெட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம் என்றும் யாருக்காக இந்த பட்ஜெட் என்பது பற்றிய விவாதத்தில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்