தமிழகத்தில் கட்டாயம் வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிய வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு விட்டது.இதை தொடர்ந்து மக்களிடம் இதை கொண்டு சேர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.மேலும் காவல்துறை சார்பில் பள்ளி , கல்லூரி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்காமல் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி காவல் துறை எச்சரித்து அனுப்பினார்.தற்போது ஒரு புதிய முயற்சியை காவல் துறை அறிமுகம் செய்து உள்ளது.
தலைக்கவசம் அணியாமல் வந்த 70 பேரை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் அவர்களை பிடித்து காவல்துறை சார்பில் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை தலைக்கவச இன்ப சுற்றுலா அழைத்து சென்று உள்ளனர்.
இந்த தலைக்கவச இன்ப சுற்றுலாவில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் , மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் , சார்பு நீதிமன்றம் , முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் , மகிளா மற்றும் கூடுதல் மகிளா நீதிமன்றம் ,குடும்ப நல நீதிமன்றம் உள்ளிட்ட 11 நீதிமன்றங்களுக்கு அழைத்து சென்று உள்ளனர்.
அங்கு தலை கவசம் அணியாமல் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டு நீதிமன்றத்திற்கு அபராதம் செலுத்த சென்றால் அங்கு என்ன நடக்கும் , எவ்வளவு நேரமாகும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சுற்றுலா அமைந்து உள்ளது.
சமீபத்தில் கேரளா காவல்துறை தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு லட்டு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…