எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்கு பதில் செல்லுங்கள் – கமல்ஹாசன்

எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில், மீனவர்களை காவு வாங்கும் தேங்காப்பட்டினம் துறைமுகத்தின் கட்டுமான தவறுகளை அரசு சரி செய்து கொள்ள வேண்டும் எனும் நியாமான கோரிக்கைகள் இன்னுமும் நிறைவேற்றப்படவில்லை. பார்வையிட சென்ற என்னை காவல்துறை அனுமதிக்க மறுத்ததால், ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து நடந்து சென்றேன். முட்டாள் தனமான அந்த கட்டுமானத்தால் உயிர்கள் பலியானதை ஊரார் கண்ணீர் மல்க விளக்கினார்கள்.
மேலும், கடலில் அழும் மீனவர்களின் குரல் மைய நிலத்தில் எதிரொலிப்பதே இல்லை. எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று கமல்ஹாசன் வெளியிட்டுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, எம்.ஜி.ஆர். பேரை சொல்லி அதிமுக ஓட்டுகளை கலைக்க முடியாது என்று கமலுக்குப் பதிலளிக்கும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதன் பிறகு எம்ஜிஆரை பார்க்காதவர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக உள்ளனர். என்னை போல பல நடிகர்கள் அதிமுகவில் உள்ளனர். எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். நிரந்தரம் என்பது எதிலும் இல்லை, யாரும் கிடையாது என்று தேர்தல் பரப்புரையின் போது கமல் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். #எதுவும்_தடையல்ல #சீரமைப்போம்_தமிழகத்தை pic.twitter.com/yAKWMTDJfr
— Kamal Haasan (@ikamalhaasan) December 16, 2020