கடந்த 30 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது -ராமதாஸ்
736 அணைகளை ரூ.10,000 கோடியில் மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளில், ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 59 அணைகள் புனரமைக்கப்பட உள்ளது.அடுத்த 10 ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழ்நாட்டில் 59 அணைகள் உட்பட 736 அணைகளை ரூ.10,000 கோடியில் மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. உலகில் அதிக அணைகள் உள்ள மூன்றாவது நாடான இந்தியாவில் அணைகள் மேம்படுத்தப்படுவது பாசன வசதியை பரவலாக்கும்.நீர் மேலாண்மை சிறப்பாக அமைய வேண்டும்; அனைத்து பெரிய ஆறுகளிலும் 5 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதைத் தான் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் கடந்த 30 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
நீர் மேலாண்மை சிறப்பாக அமைய வேண்டும்; அனைத்து பெரிய ஆறுகளிலும் 5 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதைத் தான் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் கடந்த 30 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது!#CheckDam #PMK
— Dr S RAMADOSS (@drramadoss) October 30, 2020