அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு …!வானிலை ஆய்வு மையம்
நாளை மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.நாளை மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.