தமிழ்நாட்டிலே முதன் முறை…எம்.பி. கனிமொழிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.!!
துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி எம்.பி-யின் ட்விட்டர் கணக்கிற்கு ‘கிரே’ நிற குறியீட்டை டிவிட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது.
பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் சமீபத்தில் பிரபலங்களுக்கு வழங்கும் அடையாள குறியீட்டை மாற்றியது. நீலம், கிரே, தங்க நிறம் ஆகிய நிறங்களில் மாற்றியிருந்தது. இதில் கிரே நிற அடையாள குறியீடு அரசு அல்லது பன்னாட்டு தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தி.மு.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், துாத்துக்குடி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி ட்விட்டர் கணக்கிற்கு ‘கிரே’ நிற குறியீட்டை ட்வீட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ‘கிரே’ நிற குறியீடு பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவராக கனிமொழிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.