#BREAKING: தமிழகத்தில் முதன்முறையாக ஒரேநாளில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
இன்று தமிழகத்தில் புதிதாக 5849 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 5849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,86,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 4,910 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவில் இருந்து 1,31,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.