இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி!

சென்னை மெரினா கடற்கரையில் தினமும் தங்களது பொழுதை போக்குவதற்காக மக்கள் கூடுவது வழக்கம். பொதுமக்களுக்கு மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகளை கடற்கரையை ரசிக்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக மெரினா கடற்கரையில் காவல்துறை தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று தொடக்கி
வைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதற்கான நிகழ்ச்சியை இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைத்தோம்.

நேர்த்தியான இசையை வழங்கியதைக் கேட்டு ரசித்தோம். இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்