இந்தியாவிலேயே முதல் முறை – வானிலையை கணிக்க நிதியமைச்சர் அசத்தல் அறிவிப்பு!
தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான காகிதமில்லா முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில், பல்வேறு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,தமிழ்நாட்டிற்கென வானிலையை துல்லியமாக கணிப்பதற்கு 2 வானிலை ரேடார்கள்,100 தானியங்கி வானிலை மையங்கள்,400 தானியங்கி மழைமானிகள்,11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள் வாங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மேலும்,பேரிடர் தாக்கும் முன்பே,முன்னெச்சரிக்கை வழங்குவதற்கு சூப்பர் கம்யூட்டர்(அதிவேக கணினி) உள்ளிட்ட புதிய புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
வானிலையை துல்லியமாக கணிக்க ஒரு மாநில அரசு ரேடார் அமைப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.