முதல் முறையாக…இன்று துபாய் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்!

தொழில் கண்காட்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.சுமார் 192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது.இந்த நிலையில்,தொழில் கண்காட்சியில் பங்கேற்க இன்று மாலை தனி விமானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் துபாய் செல்கிறார்.
பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு:
அங்கு சென்று தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கிறார்.மேலும், கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் கைத்தறி, விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட அரங்குகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
முதலமைச்சருக்கு கௌரவ டாக்டர் பட்டம்:
அதன்பினர்,சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதலமைச்சருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
முதல் முறையாக வெளிநாடு பயணம்:
முதலமைச்சருடன்,எம்எல்ஏ உதயநிதி உள்ளிட்டோரும் துபாய்க்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025