மதுபிரியர்கள் கவனத்திற்கு..! நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் செயல்படாது…! – டாஸ்மாக் நிர்வாகம்

நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.