தமிழக அரசு கவனத்திற்கு…! – ஆசிரியர் கி.வீரமணி ட்வீட்

Default Image

வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள், அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் கி.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள்: அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது! கிழக்குக் கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) என்ற நீள முக்கிய சாலைக்கு முத்தமிழ் அறிஞர் ‘கலைஞர் கருணாநிதி சாலை’ என்று பெயர் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத்துறையில் சிறந்த நகைச்சுவை நடிகரான சீரிய சிந்தனையாளர் விவேக் அவர்களை ‘சின்னக் கலைவாணர்’ என்று அழைப்பதுண்டு. அதை இணைத்து அவர் வாழ்ந்த பத்மாவதி நகரில் உள்ள தெருவுக்கு ‘சின்னக் கலைவாணர் விவேக் தெரு’ என்றும் பெயர் மாற்றம்-அவரது குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று அரசு ஆணை வந்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசையும், நமது முதலமைச்சரையும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் பாராட்டுகிறோம்.

அரசு கவனத்திற்கு ஒரு முக்கியச் செய்தி: தெருக்களுக்கு, நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டும் போது, கூடுமானவரை அப்பெயர் ஓரிரு சொற்களில் அமைந்தால், அப்பெயர் நடைமுறையில் பல காலம் புழக்கத்தில் இருந்து பெயர் வைக்கப் படுபவர்களுக்குப் பெருமை சேர்க்கும்.

எடுத்துக்காட்டாக ‘‘கலைஞர் கருணாநிதி நகர்’’ என்று வைத்த பெயர் – இன்று ‘கே.கே.நகர்’ என்று ஆகிவிட்டது. ஆனால், கலைஞர் வைத்த அண்ணா நகர் அப்படியே புழங்குகிறது. பேரறிஞர் அண்ணா பல்கலைக் கழகம் என்பது ‘பவுட்’ என்று சுருக்கி அழைக்கப்பட்டது. பிறகு நம்மைப் போன்றவர்கள் அப்போதைய எம்.ஜி.ஆர். அரசுக்கு சுட்டிக்காட்டி, சுருக்கப்பட்டு அண்ணா பல்கலைக் கழகம் என்று ஆனது. இந்த அடிப்படையினை பெயர் சூட்டும்போது நடைமுறைப்படுத்தவேண்டும். பெரியார் போக்கு வரத்துக் கழகத்தை TPTC என்று சுருக்கி விட்டனர். இதுபோல எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.’ என  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்