தமிழக மக்களின் கவனத்திற்கு…! தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு…!
தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில், கடந்த மாதம் 23-ம் தேதி வரை, 471 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தான் இருந்தது. ஆனால், ஜூலை 30-ம் தேதிக்கு பின், 30 ஆம் தேதி நிலவரப்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 487 ஆக உயர்ந்துள்ளது.