மக்களே ஊசி போடுங்க…இன்று 50 ஆயிரம் இடங்களில் 16-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

Published by
Edison

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது.இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,அந்த வைரஸிற்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல்,ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது.எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வரும் நிலையில், இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 400-க்கும் மேற்பட்டோருக்கு கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக,அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய,மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.

அந்த வகையில்,இதுவரை 15 மெகா தடுப்பூசி முகாம்கள்  நடத்தப்பட்டுள்ளன.இதற்கிடையில்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 2 வாரங்களுக்கு சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. அதன்படி,காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுவுள்ளது.மேலும், இந்த தடுப்பூசி முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

குறிப்பாக,சென்னையில் இன்று 200 வார்டுகளிலும் 1,600 இடங்களில்  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.எனவே,அரசு தடுப்பூசி மையம்,ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட  பகுதிகளுக்கு சென்று முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களும்,அவ்வாறு செலுத்தி கால அவகாசம் முடிந்தவர்களும் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

7 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

8 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

9 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

9 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

9 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

10 hours ago