மாணவர்களின் கவனத்திற்கு.. விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்..!
கடந்த மார்ச் மாதம் +2 மற்றும் +1 பொதுத்தேர்வு நடைபெற்று இதில் இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சமீபத்தில் எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்நிலையில், 11-ஆம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பன்னிரண்டாம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் இன்று வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதனால், 12-ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.