2024 கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை தயாரிக்க, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு முதற்கட்டமாக நேற்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி சென்றனர். அக்கூட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா
அதன் இரண்டாம் கட்டமாக இன்று அதே குழு கன்னியாகுமரியில் கூடி அதே போல் பலவேறு தரப்பினரிடமிருந்து மனுக்களை பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் கன்னியாகுமரியின் விவசாய சங்ககள், மீனவ அமைப்புகள், வியாபார சங்ககள், ஆசிரியர்கள், பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள், பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளை சார்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், பட்ஜெட் போன்ற நிகழ்வுகளில் வணிக சட்டங்கள் ஏற்றும் பொழுது வணிகச்சங்கங்களையும் அழைத்து பேசி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் இது போன்ற பல கோரிக்கைகளை பல தரப்பினர் மனுவாக அளித்தது உள்ளனர்.
இதுபோன்ற அனைத்து மனுக்களையும் கனிமொழி தலைமையிலான குழு கேட்டு அறிந்து அந்த மனுக்களையும் பெற்று வருகிறது. பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்வோம் என கனிமொழி தலைமைலான அந்த குழு உறுதி அளித்துள்ளது. இந்த இரண்டாம் நாள் கூட்டமானது இன்று பிற்பகல் வரையில் நடைபெற்றது.
இதேபோல், பிப்ரவரி 7ம் தேதி மதுரையிலும், பிப்ரவரி 8 ம் தேதி தஞ்சாவூரிலும், பிப்ரவரி 9ம் தேதி சேலத்திலும், பிப்ரவரி 10ம் தேதி கோவையிலும் மற்றும் பிப்ரவரி 11 ம் தேதி திருப்பூரிலும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடத்தவுள்ளது.
திருச்சி : மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர்…
சென்னை : கேரளாவின் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார்,…
சென்னை : வழக்கமாகவே வெற்றிமாறன் இயக்கும் படங்களில் கெட்டவார்த்தைகள் வருவது பெரிய விஷயம் இல்லை. அப்படியான வார்த்தைகள் படத்தின் கதைக்கு தேவைப்படுவது…
சென்னை : இன்று (18-12-2024) வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும் வலுப்பெற்று,…
சென்னை : அடுத்த ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டில் எந்தெந்த நாட்களில் ரேஷன்…