கன்னியாகுமரியில் திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு..!

2024 கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை  தயாரிக்க, திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு முதற்கட்டமாக  நேற்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி சென்றனர். அக்கூட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா

அதன் இரண்டாம் கட்டமாக இன்று அதே குழு கன்னியாகுமரியில் கூடி அதே போல் பலவேறு தரப்பினரிடமிருந்து மனுக்களை பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் கன்னியாகுமரியின் விவசாய சங்ககள், மீனவ அமைப்புகள், வியாபார சங்ககள், ஆசிரியர்கள், பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள், பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகளை சார்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், பட்ஜெட் போன்ற நிகழ்வுகளில் வணிக சட்டங்கள் ஏற்றும் பொழுது வணிகச்சங்கங்களையும் அழைத்து பேசி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் இது போன்ற பல கோரிக்கைகளை பல தரப்பினர் மனுவாக அளித்தது உள்ளனர்.

இதுபோன்ற அனைத்து மனுக்களையும் கனிமொழி தலைமையிலான குழு கேட்டு அறிந்து அந்த மனுக்களையும் பெற்று வருகிறது. பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்வோம் என கனிமொழி தலைமைலான அந்த குழு உறுதி அளித்துள்ளது. இந்த இரண்டாம் நாள் கூட்டமானது இன்று பிற்பகல் வரையில் நடைபெற்றது.

இதேபோல், பிப்ரவரி 7ம் தேதி  மதுரையிலும், பிப்ரவரி 8 ம் தேதி தஞ்சாவூரிலும், பிப்ரவரி 9ம் தேதி சேலத்திலும், பிப்ரவரி 10ம் தேதி கோவையிலும் மற்றும் பிப்ரவரி 11 ம் தேதி திருப்பூரிலும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான  திமுக தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடத்தவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்