நெறியின் வழியே நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே என்று வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். திருமாவளவனுக்கு ஆதரவாகவும் ஒரு சில அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,திருமா வளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே – அவன் அரிமா போலே ஆர்த்த கருத்தும் அரிவையர் வாழ்வதற்கே – அதை அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது அரசியல் செய்வதற்கே – நாம் நெறியின் வழியே நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…