ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிய திமுக கூட்டணி.!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் வீதி வீதியாக கை சின்னத்திற்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக பதவியில் இருந்த திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு அந்த தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதனை அடுத்து பிரதான கட்சிகள் தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ் இந்த முறையும் அவ்வாறே களம் காணுகிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா விலகி கொண்டதன் காரணமாக அதிமுக நேரடியாக களம் காணும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக இன்றே திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் தொண்டர்கள் வீதி வீதியாக கை சின்னத்திற்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.