நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி நேற்று உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக சவர்மா வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி கலையரசிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஷவர்மாவை விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் நகரில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது தாயார் சுஜாதா, மாமா, அத்தை மற்றும் தம்பி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கலில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? என கண்காணிக்க வேண்டும் என்றும் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…