அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு
மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார் என அமைச்சர் சேகர்பாபு பேச்சு.
பெருமழை காலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவினால் அறநிலையத்துறை சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார். தமிழக அரசு மதம், சாதி சார்ந்தது அல்ல, ஆளுநர் வேலை இல்லாமல் ஏதாவது பேசி கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.
இதனிடையே, பருவமழை தொடர்பாக பேசிய அவர், வாய்புளித்ததை மாங்காய் புளித்தது என சொல்லக்கூடாது. எப்போதும் மழை நீர் தேங்கும் வால் டாக்ஸ் சாலையில் இன்று மழைநீர் தேங்கவில்லை. சென்னையில் போர்க்கால அடிப்படையில் ராணுவத்தை போல் மாநகராட்சி பணியாளர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.