தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது – அமைச்சர் காமராஜ்.
தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என்று அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்ப்பதை உணவுத்துறை முறையாக செயல்படுத்தியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் விலையின்றி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், மக்களுக்கு கூடுதல் அரிசி வழங்க ரூ.438 கோடி நிதி ஒதுக்கி மத்திய தொகுப்பில் இருந்து அரிசி வாங்கப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு வீடு தேடிச்சென்று உண்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அம்மா உணவகங்களில் விலையின்றி ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கூறியுள்ளார். அசாதாரண சூழலில் முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கை பேசப்படக்கூடிய வகையில் உள்ளது. குழுக்கள் அமைத்து துறைரீதியான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…
சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…
சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது.…
திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…