நெல்லை மாவட்டத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி
நெல்லை மாவட்டத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், 1500 பேர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய தொழிற்சாலைகள் துவங்க உள்ளது. 14 நிறுவனங்கள் தங்கள் தொழிலை துவங்கி உள்ளது.நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் .தென்காசி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 82.27 கோடி ரூபாய் கடன் உதவி செய்யப்படும். தென்காசி மாவட்டத்தில் ஏராளமான தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.