கோயம்பேட்டில் இன்று முதல் திறக்கப்படும் உணவு தானிய சந்தை!
கொரோனா ஊரடங்குக்கு பிறகு கோயம்பேட்டில் இன்று முதல் திறக்கப்படும் உணவு தானிய சந்தை.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பரவல் அதிக அளவில் இருந்ததால், கடந்த சில மாதங்களாக போக்குவரத்து கல்வித்துறை வணிக வளாகங்கள் மார்க்கெட்டுகள் என அனைத்துமே அடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில், சென்னையிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ஆறு மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த உணவு தானிய வளாகம் இன்று முதல் திறக்கப்படும் எனவும், காய்கறி சந்தை இருபத்தி எட்டாம் தேதி திறக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து உணவு தானிய வளாகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பதாகவே கடைகள் சீரமைப்பு பணிகளும் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கடைகள் பூட்டப்பட்டு இருந்ததால், தானியங்கள் அனைத்தும் வீணாகி விட்டதாகவும், குறைந்தபட்சம் ஆறு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.