ஆபாச படம் பார்த்தவர்களில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக ஒரு ஆய்வறிக்கை தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்பவர்கள், பகிர்ந்தவர்கள் என அனைவரும் கைது செய்யபட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்தது.
இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்பவர்களையும் ,பார்ப்பவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றன.அந்த வகையில் சமீபத்தில் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் 3 போலி பேஸ்புக் கணக்கு மூலம் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனால் போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சமூக ஊடகவியல் போலீசார் சமூக வலைதளங்களில் கண் காணித்தபோது அசாம் மாநிலத்தை சார்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவர் தனது முகநூலில் சிறார் ஆபாச படங்களை பதிவிட்டு வருவது தெரியவந்தது.இவர் பொள்ளாச்சியில் இருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சமூக ஊடகவியல் போலீசார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் பாலக்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த ரெண்டா பாசுமாடரி என்பவரின் கைபேசி ஆய்வு செய்தபோது அந்த கைபேசியில் சிறார் ஆபாசப்படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்த போது சிலர் ஆபாச படங்களை முகநூல் மூலமாக பலருக்கும் பகிர்ந்து வருவது தெரிய வந்தது.
இதனால் ரெண்டா பாசுமாடரி மீது போக்ஸோ மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…