வேளாண் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை…!
வேளாண் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை.
இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று திமுக ஆட்சி பொறுப்பேற்று 100-வது நாளை எட்டியுள்ளதையடுத்து, கலைஞரின் நினைவிடம், ‘100-வது நாள் ஆட்சி, மக்கள் மகிழ்ச்சி’ என பொறிக்கப்பட்டு, பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.