தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒப்புதல்.!
மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேறியதை அடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்திருந்தது.
இதையடுத்து கடந்த 19ம் தேதி மக்களவையில். 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரை அழைப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழர்களுக்காக ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாநிலங்களைவையில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலோட் இந்த மசோதாவை கொண்டுவந்த நிலையில், அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே உள்ளிட்டோர் இதன் மீதான விவாதத்தில் பங்கேற்றனர். அதன்பின் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.