அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.? முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை.!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு , தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தற்போது அவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.