வாடிபட்டியில் பறக்கும் மின்கம்பம்!!
வாடிப்பட்டி:செம்மினிப்பட்டி கிராமம் வாடிப்பட்டி ஓன்றியத்திற்குட்பட்டது . வாடிப்பட்டி துணை மின்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள இக்கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் இரும்பு மின்கம்பம் ஒன்று அடிப்பகுதி துருப்பிடித்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் பலமுறை மின்சாரா வாரியத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து இரும்பு மின்கம்பத்தினை சரிசெய்யும் வகையில் புதிதாக சிமெண்ட் மின்கம்பம் அமைக்கப்பட்டது.ஆனால், இதுவரை மின் இணைப்பு அந்த சிமெண்ட் கம்பத்திற்கு மாற்றப்படவில்லை. ஒடிந்து கிழே விழும் நிலையில் உள்ள அந்த பழைய இரும்பு மின்கம்பத்தில் தான் மின் இணைப்புகள் உள்ளன. எப்போது ஒடிந்து விழுமோ என்ற அச்சத்துடனே அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். அதனை சரிசெய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.