பறக்கும் பியானோ – அந்தரத்தில் பறந்தபடி பியானோ வாசித்த பெண் கலைஞர்..!
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அந்தரத்தில் பறந்தபடியே பியானோ வாசித்த பெண் இசை கலைஞர்.
மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த வித்தியாசமான நிகழ்ச்சிகள் அரங்கேறி வரும் நிலையில், பெண் பியானோ கலைஞர் பறக்கும் பியானோவில் பறந்தபடியே இசை வாசித்துள்ளார். பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலை வாசித்தார்.
அதனை தொடர்ந்து அந்தரத்தில் பறந்தபடி வந்தே மாதரம் பாடலுக்கு அப்பெண் இசை இசைத்தது பார்வையாளர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. அதனை தொடர்ந்து, ஆளப்போறான் தமிழன், படையப்பா போன்ற பாடல்களுக்கு இசைக்கலைஞர்கள் அந்தரத்தில் பறந்தபடியே இசை இசைத்துள்ளனர்.