மகிழ்ச்சியில் விவசாயிகள், வருத்தத்தில் மக்கள்.. தென்காசி சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு!
தென்காசி மாவட்ட மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ள காரணத்தினால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தென்காசியில் மாவட்டத்தில் உள்ள மலர் சந்தை திறக்கப்பட்டது. இங்கு மல்லிகை, கேந்தி, கனகாம்பரம், சம்பங்கி, அரளி போன்ற பல்வேறு வகையான மலர்கள் விற்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தென்காசி மலர்சந்தையில் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்பொழுது மல்லிப்பூ கிலோ ரூ.700 க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.