தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் மலர்கள்!!
தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி தொடங்கியது.
கடந்த நிதியாண்டி மட்டும் 66 கொடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுரை மல்லிகை அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது வீடுகளிலும், கோவில்களிலும் மலர் அலங்காரம், பூஜை மற்றும் முக்கிய விஷேச தினங்களுக்கு பயன்படுத்த தமிழ்நாட்டில் இருந்து பூக்கள் அனுப்பப்படும்.
கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டதால் பூக்கள் ஏற்றுமதி தடைபட்டது. தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்திருக்கும் நிலையில், மதுரை மல்லிகை பட்டன் ரோஜா, அல்லி, சாம்மந்தி, மேரிகோல்டு போன்ற பாரம்பரிய பூக்களின் ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளது.