வெள்ளபாதிப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!

Default Image

வெள்ளத் தணிப்பு – அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ட்வீட். 

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக 44 செ.மீ மழை ஒரே நாளில் பதிவானது.

இந்த நிலையில், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘கனமழையால் அதிக பாதிப்புக்குள்ளான கடலூர்,மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு செய்தேன்; வெள்ளத் தணிப்பு – அகற்றும் பணிகளைக் கவனமாகவும் துரிதமாகவும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்