12 தமிழக மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் காவிரி கரையோரம் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிகமாகியுள்ள காரணத்தால் அணையில் இருந்து நீர் திறந்துவிட படுகிறது.
மேலும், காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய ஆறுகளின் நீர்பிடிக்குகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் காவேரி கரையோரம் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.