Flood Alert: வைகை அணை நீர்மட்டம் உயர்வு! 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Vaigai Dam

தமிழகத்தில் கடந்த வாரம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், ஏற்கனவே, கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருவதால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தொடர்ந்த மலை பெய்து வருவதாலும், பெரியாறு அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறந்து விடுவதால், அம்மாவட்டத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் வைகை அணையின் நீர் மட்டம  குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 3177 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 66.31 அடியாக உயர்ந்ததை அடுத்து, 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தற்போது, அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதை அடுத்து, முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை..!

68 அடியை எட்டியதும் இரண்டாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும், இதனை தொடர்ந்து 69 அடியை எட்டும் நிலையில், மூன்றாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், ஆற்றங்கரையை கடக்கவோ, கால்நடைகளை குளிக்க வைக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#BREAKING: முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதி ..!

14 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்