நிரம்பும் பூண்டி ஏரி… திருவள்ளூர் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பூண்டி ஏரி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய காலை பெய்ய தொடங்கிய கனமழை இன்னும் பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் மொத்த அடியான 35 அடியின் 34.05 அடியை எட்டியதால், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, செம்பரம்பாக்கம் ஏரியும் 85% நிரம்பியுள்ளது. இதன் காரணமாக, கொசஸ்தலை உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை தீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம். கிருஷ்ணாபுரம் ஆட்ரம்பாக்கம், ஒதப்பை நெய்வேலி எறையூர், பீமன்தோப்பு கொரக்கத்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம் ஆத்துர்.
பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம் வன்னிப்பாக்கம், அருவன்பாளையம் மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம் எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி உபரி நீர் திறப்பு: திருவள்ளூர் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
#poondi #HeavyRain #RainAlert #TNRain #Chennai #TamilNadu #HeavyRain pic.twitter.com/Sd1fJdbyE6
— Dinasuvadu (@Dinasuvadu) December 12, 2024