கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 620 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.