கடலூர் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

KRP DAm

கர்நாடகாவில் மழை பொலிவு அதிகமாக இருக்கும் போது, கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும், அதன்படி, கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியைத் தாண்டி உள்ளது.

இந்த நிலையில், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கே.ஆர்.பி. அணை நிரம்பிய நிலையில், நீர்வரத்து 1,176 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றின் கரையை மக்கள் யாரும் கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கே சமயம், மக்கள் தங்களது கால்நடைகளை ஆற்றின் கரையோரம் மேச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், ஆற்றினுள் யாரும் இறங்க வேண்டுமா என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்