#Breaking:உஷார்…5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
நாடு முழுவதும் கத்தரி வெயில் தொடங்கிய போதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நேற்று 885 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 2,021 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால்,கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக,கிருஷ்ணகிரி,விழுப்புரம்,கடலூர்,தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி,பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும்,தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ,ஆற்றில் இறங்கி கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.